5/2/09

பதில் சொல் ! ஆனால் லாஜிக் உடன் பேசிப் பழகு சிபிஎம் !!

//நண்பர் ஒருவர் சந்திப்பு என்ற பெயரில் இயங்கும் சிபிஎம் காரருக்கு எழுதிய பதில் இது. மானமற்ற சிபிஎம் காரர் வந்து பதில் சொல்ல வேண்டாம்.சந்திப்பு விமர்சித்தது இதோ//
ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள்!
ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள முரண்பாடுகள் இங்கே விமர்சிக்கப்படுகிறது.
முதல் பொய்: புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.
ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? கம்யூனிச வேடம் இப்போதுதான் கலைய ஆரம்பித்துள்ளது. போகப் போக புரியும் தமிழ் மக்களுக்கு இதுஒரு இலங்கை ஆதரவு என்.ஜீ.ஓ. என்று.
இரண்டாவது பொய்: இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன.
தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் - தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!
மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.
அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.
நான்காவது பொய்: இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
தமிழ் இனவாதத்தின் அப்பட்டமான - மலிவான - இழிவான குரலின் பிரதிபலிப்பு மேற்கண்ட வரிகள். ம.க.இ.க. சி.பி.ஐ.(எம்-எல்) எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மை முகம் இதுதான். அதாவது, இந்தியாவின் இதர மொழிவாரிய இன மக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கவலைப்படுவது தெரிகிறது. அதுசரி ஏதோ நீங்கள் இந்தியா முழுவதும் புரட்சியை கொண்டு வந்து கிழிக்கப் போவதாக ஏமாற்றுகிறீர்களே தமிழகத்தை தாண்டி உங்களுக்கு வேற்று மாநிலங்களில் அமைப்பு இருந்தால் அவர்களை வைத்து போராடியிருக்கலாமா? குரல் கொடுக்க வைத்து இருக்கலாமே? ஏதோ லண்டனில் ம.க.இ.க. இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டு பெருமையடிக்கும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கருநாடக, ஆந்திர உழைக்கும் மக்களைக் கூடவா அணித்திரட்ட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறோம் உங்களது குழு வெறும் தமிழக அளவில் சீர்குலையை மட்டுமேன முன்னிறுத்தும் குழு என்று. அது மட்டுமா? வெறும் இனவாதக்குழு! இது படிப்படியாக வளர்ந்து சிங்கள இனவாதத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் அளவிற்கு வளர்ந்து விடும். புலிகளுக்கும் உங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. அதனால்தான் உங்களால் மற்ற மாநில மக்களை அணிதிரட்ட முடியலி்லை. புலிகளுக்கு அட்வைஸ் செய்வதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. பாவம் இணையவாதிகளை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. உங்கள்ம முகம் கிழிய ஆரம்பித்துள்ளது.
ஐந்தாவது பொய்: சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.
நீங்கள் வக்காலத்து வாங்கும் புலிகள் பிரேமதாசா அரசாங்கத்தோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்த சுயநிர்ணய உரிமை எங்கே போனது! புலிகள் ஒன்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொள்ளாதவர்கள் இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணம் மிக முக்கியமானது. அதுசரி! தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள மக்களை விடுவிப்பது சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூட - முனகல்கூட வரமாட்டேங்குதே இது என்ன இலங்கை தமிழ மக்கள் மீது உள்ள பாசமா? அல்லது புலிகள் மீதான கரிசனமா? ம.க.இ.க. செய்யப்போகும் புரட்சி இந்தியாவில் அல்ல என்பது மட்டுமல்ல. செய்ய விரும்புவது இலங்கையில் உள்ள முல்லைத் தீவில் மட்டும்தான் என்பது புரிகிறது.
புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். என்று சொல்லும் ம.க.இ.க. (சி.பி.ஐ.-எம்)எஸ்.ஓ.சி. தலைமை புலிகளை வெறும் புல்லு தின்னும் புலிகளாக நினைப்பது சூப்பர் காமெடி. அதாவது இவர்கள் நோக்கில் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் புலிகளால்தான் முடியும்! மற்ற இலங்கைத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குதான் லாயக்கு! ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க இரயாகரன். இனவாதத்தின் உச்ச கட்டத்தில் ம.க.இ.க.
பொய் ஆறு: தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.
தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் முக்கியமான கட்சியான தி.மு.க. - அதிமுக - சி.பி.எம். - காங்கிரசு போன்றவைகள் புலிகளை ஆதரிக்கவில்லை. மாறாக அங்கு பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் நிற்கின்றன. ஆனால் தமிழ் இனவாதம் நடத்தும் சிறு கட்சிகள்தான் இந்த வேடத்தை தற்போது ஏற்று நடத்துகிறத. அதில்கூட தாங்கள்தான் புரட்சிகரமான முன்னிணியில் இருப்பதாக பீத்திக் கொள்கிறது ம.க.இ.க. இனவாதமே உன்பெயர்தான் சந்தர்ப்பவாதமா?
பொய் ஏழு: தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.
உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக அணுக மாட்டோம் என்ற ஒரே புரட்சிகர சீர்குலைவு அமைப்பின் உன்னத குரல் இதுதான். இதைத்தான் இரயாகரன் கேள்வி கேட்டார் இதுவரை அவருக்கு எந்தவிதமான பதிலையும் வினவு அளிக்கவில்லை. சந்திப்பு கேள்வி எழுப்பினால் ம.க.இ.க. இனவாதிகள் தனிநபர் அவதூறுகளை அள்ளித் தெளித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். கொள்கை குன்றுகளாய் மிளிர்கிறார்கள்.
பொய் எட்டு: இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும்.
இந்தியா கைவிட்டு விட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதாவது இவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கதான் இலங்கையின் உற்ற நன்பனாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நட்பாயிருப்பதால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை நாம் அறிவோம்! இவர்கள் புரட்சிகரவாதிகள் அல்லவா? அதன் இப்படியெல்லாம் சிந்தித்து - சீர்தூக்கி வர்க்க ஆராய்ச்சி செய்கிறார்கள்....
பொய் ஒன்பது: வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம்.
பரவாயில்லை இந்தியாவில்தான் ஓட்டுக் கட்சிகள் - பாராளுமன்றம் பன்னித் தொழுவம் என்று கூறி ஜனநாயகம் இல்லை என்று மாரடிக்கும் இந்தக் கூட்டம். வெளிநாட்டில் எல்லாம் சோசலிச ஜனநாயகம் நிலவுவதாகவும் அந்தக் கட்சிகள் எல்லாம் இவர்களைப் போலவே வர்க்கத்தை கடந்து நிற்பதாகவும் கூத்தடிப்பது வேடிக்கையானது. இவர்கள் அணிகள் எல்லாம் இதனைப் படித்து விட்டு புல்லரித்துப் போவார்கள்.//


//நண்பரின் பதில் இதோ

//முதல் உண்மைவரலார்ர்று ரீதியாக தமிழர்கள் இலங்கையில் மூன்றாக உள்ளனர் என்பது குழந்தைக்கு கூடத் தெரிந்த உண்மை. பாதுகாக்கப்பட்ட பகுதியில் இலங்கை உள்ளிட்ட 7 நாட்டு ராணுவத் தாக்குதல் யார் மீது நடத்தப்பட்டது... எந்த பயத்தில் நடத்தப்பட்டது... ஜேவிபி போன்ற முன்னாள் டிராட்ஸ்கியவாத இன்னாள் இனவாதிகள் பேச்சும் உங்கள் பேச்சும் ஒன்று போலத்

தெரிகின்றதேஇரண்டாம் உண்மை: மோதல் நடந்ததாக வினவு எங்குமே சொல்லவில்லை. ஆனால் தாக்குதலை எதிர்த்துப் போராட வேண்டிய சிங்கள மக்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் அந்த அமைதி ஒருவகையான சம்மதம் இல்லையா? குஜராத் இல் இந்துமத வெறியர்களின் தாக்குதலைத் தடுக்கத் தவறிய நடுநிலை இந்துக்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா...அது இலங்கைக்கும் பொருந்தும்தானே...மூன்றாம் உண்மை: விமர்சனத்தில் இருவகை உண்டு. திருந்த வேண்டும் என்ற நோக்கில் வைப்பது அதுதான புலிகள் மீது வினவு வைப்பது. போகிற போக்கில் எல்லோரையும் உங்களைப் போல வெறுமென திட்டிவதை மாத்திரம் செய்வது உங்களைப் போல. விமர்சனம் பற்றிய இந்த அடிப்படை கூட புரியாதவர்கள் எப்படி கம்யூனிஸட் கட்சி என்ற பெயரில் உலவுகின்றீர்கள் எனத் தெரியவில்லை. கரிசனமும், கோழைத்தனமும், ஓநாய்த்தனமும் ஒரே நபரிடம் நிலவுவதாக ஆறு அறிவு படைத்த மனிதனால் ஆதாரமின்றி சொல்வது சாத்தியமில்லை. லாஜிக் இல்லாமல் பேசும் வழக்கத்தை மாற்றி மக்களுக்கு புரியும் வகையில் இன்னும் சரியாகச் சொல்வது என்றால் உங்களை விட அறிவாளிகளான சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் பேசுங்கள்.நான்காம் உண்மை: படிக்கத் தெரியும்தானே... சிபிஎம் லதான அறிவொளி இயக்கமெல்லாம நடத்துறாங்க... அரசியல் விமர்சனத்துக்கு அமைப்பு பலம் பத்தி பதில் சொல்ற...அமைப்பு பலமா இல்லாததால இனவாதமாயிருவாங்கன்னு சொல்ற... இப்படி லாஜிக் இல்லாம பேசுறத யாருமே சகிக்க முடியாதே.... யாருகிட்ட இதெல்லாம் கத்துக்கிட்டீங்க..கட்சில இப்படி உளறத் தெரியாதவங்கல களையெடுக்க எதுவும் சீர்செய் இயக்கம் நடத்துறீங்களா.... ஸ்ட்ரெய்ட்டா கேக்குறேன். ஓரு தேசிய இனம் அழிக்கப்படும் பொது கம்யூனிஸடுனு தன்ன சொல்லிக்கிறவன் என்ன செய்யணும்...ப்ளீஸ் லாஜிக் கூட ஞாபகப்படுத்துறேன். (இரண்டாம் உலக்பபோர், யூத இனம். ஹிட்லர், பாசிசம், ..)ஐந்தாம் உண்மை: திரும்பவும் சொல்றன் புலிகள வினவு ஆதரிச்சதுக்கு ஆதாரம் காட்டு. சும்மா நீ நினைக்கிறதயே பினாத்தாத... புலிகளிடம் மக்கள் மாட்டிக் கொண்டார்கள் என்பதற்கு உங்களது மத்திய அரசியல் குழுவை விட உயர்வாக நீங்கள் வைத்திருக்கும் மவுண்ட் ரோடு விஷுணுவோ அல்லாட்டி அவரு சம்பந்த காரரு டிவியான சன் டிவி யோ அல்லாத ஏதாவது ஆதாரம் சொல்லு பாக்கலாம். 48 மணி நேரத்துல யாருமே வரலியே... மக்கள கேவலப் படுத்துறத நாடு தாண்டி பண்றீங்களா..கம்யூனிஸ்டுகள் என்றால் சர்வதேசிய வாதிகள் அவர்கள் தெற்காசிய பிராந்திய ரவுடியாக தனது நாட்டை மாற்றுவதற்கு துணைநின்றால் இரண்டாம் அகிலத்துக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.உண்மை ஆறு: நீங்களோ காங்கிரசோ பெரிய கட்சியா ப்ளீஸ் 2004, 06 தேர்தல்ல் எத்தின் சதவீதம்ஓட்டு வாங்குனீங்க... அதிமுக, காங்கிரசு ஒரு காலத்துல புலிகள ஆதரிச்சுது. அப்பவே அவிங்கள விமர்சனம் பண்ணி பேசினது நாங்கதான். போரை நிறுத்தாமல் மக்களை எப்படி பாதுகாப்பது தராஸ்கிய வழியில் ஏதாவது கண்டுபிடித்துள்ளீர்களா? ஜனநாயக அறிகுறி கூட இல்லாத நீங்க புரட்சி ப்த்தில்லாம பேசுறீங்களை பாப்பார என்.ராம் கோயிச்சுக்கப் போறாரு. இலங்கைல தொழில் நடத்துற டாடா கோயிச்சுக்குவாரு, மிட்டல் கோயிச்சுக்குவாரு...இவிங்க மே.வங்கத்துல மக்கள நசுக்குன மாறி இலங்கைலயும் நசுக்கி காலனியாக்கனும் அதுவும் சிவப்புக் கொடி பேரால....இதுக்கு பேரு பாப்பு வேல இல்லையா... என்ன பண்றது பழகுன தோசம் உங்களுக்கு பாப்பாரப் புத்தியும் வந்திருச்சி...
உண்மை ஏழு: உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும். மிகச்சரி. நல்லாப்படிம்மா... அத ஒரு எதிரிகளின் அரசுக்கு தான் சொல்றாங்க... என்ன பண்றது நால்ற வருச குறுகுறுப்பு உறுத்துதோ? மக்கள் கொஞ்சம் இன உணர்வு கொள்வது தவிர்க்க முடியாத அறிவியல். ஒரு கம்யூனிஸட் கூட தடுமாறும் இடம் இது. மக்கள் இனவாத அரசியலிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினால் முத்துக்குமாரின் ஊர்வலத்தில் வந்து ஏன் பேசாமல், சர்.பி.டி. தியாகராசர் அரங்கத்திற்கு போய் சில அறிவாளிகளுக்கு மட்டும் நிகழ்ச்சி நட்த்திய வீரத்தை என்னவென்பத்? இதுதான் மக்களிடம் நீங்கள் செல்லும் லட்சணமா? அதெல்லாம் இருக்கட்டும் அந்த இன உணர்வு தவறு எனச் சொல்லும் அறிவியல் பார்வை உங்களுக்கு இருந்தால் என்ன மயித்துக்கு ஆயுத பூஜ கொண்டாடுறீங்க்...உண்மை எட்டு: இப்பிடி இந்தியா எப்படி பேட்ட ரவுடி ஆவளாம்னு சீர்தூக்கி வேல செய்ய எப்படி ஒரு கம்யூனிஸ்டு சிந்திப்பான். ஓ... குறைந்த பட்ச செயல்திட்டத்துல காங்கிரசுக்காரனுக்காக சிந்திக்கிறதும் ஒன்னா உங்களுக்கு.. பாகிஸ்தான் அப்போ நமக்கு எதிரி நாடா? ஏப்பு இப்படி சொன்னப்புறமும் உங்கள வந்து ஏன் அத்வானியும் மோடியும் பார்த்து கூட்டணி போடாம இருக்காங்க...உண்மை ஒன்பதும், உரைக்காத உண்மையும்: தயவு செய்து உங்க கட்சில் யாருக்காச்சும் மார்க்சிய அறிவு இருந்தா ஜார்ஜ் தாம்ஸனின் மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை என்ற நூலை படித்துப் பார்க்கவும், முக்கியமாக விவாதிக்கவும். லாஜிக் ஆக விவாதிக்க திணறினால் எனது செல் நம்பரைத் தருகிறேன் அழையுங்கள். உங்களது அலுவலகத்திலேயே வைத்து கூட விவாதிக்கலாம். வர்க்கம், தேசிய இனம் பற்றிய பத்தாம் பசலிகளுடைய தவறான கருத்துக்களை எளிய முறையில் அவர் புரிய வைத்துள்ளார். கற்றுக் கொள்வதற்கான மாணவப் பணிவு புத்தக்திற்கு முன்பாவது உங்களுக்கு அவசியம் தேவை

19/1/09

பாரதி vs. சி.பி.எம். vs. அதிமுக

சமீபத்தில் சென்னை புறநகர் பகுதியில் நடந்த ஒரு அதிமுக பொதுக்கூட்டத்தை தேநீர்க்கடையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்.

புரட்சித்தலைவியின் புகழ் பாடிய சிறப்பு பேச்சாளர் அதன்பிறகு கூட்டத்திற்கு விறுவிறுப்பு ஏற்ற கருணாநிதியைச் சாட ஆரம்பித்தார். கூட்டம் களை கட்டியது.

பாரதியின் பெயரால் அமைந்த விருதை மு.க விற்கு தந்தது தவறாம். அதற்கு அவர் சொன்ன விளக்கம் பாரதியின் அன்பர்கள் இதுவரை காணாத பொழிப்புரை.

கருணாநிதி பாரதியின் வார்த்தைகளை மீறியவராம். அதாவது ''மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம், ... சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்'' என்ற பாரதி நம்மை அரபிக்கடலில்தான் கப்பல் விடச் சொன்னார். ஆனால் கருணாநிதி வங்கக்கடலில் கப்பல் விடுகிறார். அதுவும் பாரதி 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' எனப் பாலம் போடச் சொன்னால் சேது கால்வாய் வெட்ட முனைகிறார் கலைஞர். எனவேதான் பாரதிக்கு எதிராகச் செயல்படும் கலைஞர் அவ்விருதுக்கு தகுதி படைத்தவர் அல்ல். என்றார் அந்த மாநிலப் பேச்சாளர்.

பாரதி அன்பர்களே உங்களுக்கு ஒரு சவால் ... இச்சவால் என்னிடமிருந்து வரவில்லை. உங்களது புதிய பங்காளி புரட்சித்தலைவியின் அணியிலிருந்து வருகிறது. ஒன்று பாரதியைக் காப்பாற்றுங்கள்.... முடியவில்லையா வேட்டியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

லேபிள்கள்: , , , , ,

9/1/09

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

<ப>
நண்பர் சந்திப்பு இதுபற்றிய தங்களது கட்சியின் கருத்து, போக்குகளை உதாரணத்துடன் தந்தால் எனக்கு புரிந்து கொள்ள உதவும். இனி தினசரி புரிதலுக்காக சில கேள்விகளுடன் சந்திப்பேன்.<ப>

லேபிள்கள்: , , , , ,

8/1/09

இயற்பெயரில் இயங்குங்கள் ! புரட்சித் தலைவியைத் தவிர யாருக்கும் புனைபெயர் வைக்க அதிகாரம் இல்லை. - CPM மாநிலக் குழுவின் தீர்மானம்

இயற்பெயரில் மட்டுமே இயங்க வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீர்மானித்து விட்டதால் மாற்றுக் கட்சியாக யாம் இருந்த போதும் எமது பெற்றோர் இட்ட பெயரையே பயன்படுத்துகிறேன். மாநிலக் குழு தீர்மானத்தை சந்திப்புவும் கடைபிடிப்பார் என நம்புகிறேன்.

2/1/09

ஏன் கம்யூனிஸ்டுகள் சித்தாந்தரீதியாகப் போராட வேண்டும்

ஏன் கம்யூனிஸ்டுகள் சித்தாந்தரீதியாகப் போராட வேண்டும் என்று அனைவருமே கேட்கிறார்கள்?

வெகு எளிய கேள்வி போலத் தோன்றக் கூடும். எளிய கேள்விகளுக்குதான் பதில் அளிப்பது சிரமமானது. குழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்வதைப் போலவே கடினமான ஒன்று.

கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி..போன்ற சில நூறு பேர்களுக்கானது தி.மு.க.

ஜெயலலிதா, சசிகலா, சேதுராமன் போன்ற சிலருக்கானது அதிமுக.

...இப்படி தமிழக அளவில் கட்சிகளை வகைப்படுத்தலாம். இக்கட்சியால் பயனடைபவர்கள் எண்ணிக்கை சில ஆயிரத்தைத் தாண்டாது.


இந்திய அளவில் சோனியா, ராகுல், சிந்தியா, சிதம்பரம் செட்டி, வாசன் மூப்பன், ..போன்ற பலரை represnt பண்ணும் கட்சி காங்கிரஸ்.

அத்வானி, வாஜ்பாய், இல கணேசன், சிந்தியா வகையறாக்களை represent பண்ணும் கட்சி
பாஜக....

இப்படி அகில இந்தியாவிலும் ஒரு லட்சம் பேரைக் கூட இவ்வளவு கட்சிகளும் represent பண்ணுவதில்லை. ஜாதிக்கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

நம் நாட்டின் மக்கள்தொகை நூறு கோடியைத் தாண்டி விட்டது. சமூகமோ வர்க்கங்களாகத்தான் பிரிந்து கிடக்கிறது. இன்னும் சொல்வதென்றால் இரண்டு வர்க்கசேர்க்கைகளாகப் பிரிந்து கிடக்கின்றது. ஆம் வாழ வழிசெய்து கொண்டவர்களின் இந்தியாவாகவும் வாழ வழி மறுக்கப்பட்டவர்களின் இந்தியாவாகவும் பிரிந்து கிடக்கின்றது நாடு.

இதை மக்கள் தமது சுயசிந்தனைகளாலே கண்டடைவார்கள் என விட்டுவிட முடியுமா? அல்லது அது சாத்தியமா? பெரும்பான்மை மக்களுக்கு சாதியின் பெயரால் கல்வியை மறுத்த ஒரு சமூகத்தில் இதை எதிர்பார்ப்பது கானல்நீரை நம்பி விவசாயம் செய்வது போல அல்லவா?

ஆகவேதான் வாழ வழியற்ற இந்திய விவசாயிகள், தொழிலாளிகள், சிறு உடமையாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், தேசிய முதலாளிகள் என இந்த globalization ஆல் பாதிக்கப்பட்ட அனைவரையும் represent பண்ணக் கூடிய ஒரே கட்சியை நிறுவ வேண்டிய தேவையும் அக்கட்சியின் கீழ் இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதும் அவசியம்தானே.

திமுக, அதிமுக, பாமக, மதிமுக ஆக இருந்தால் 1000 ம் 1000ம் சேர்ந்து கூட்டமாகக் கொள்ளையடிச்சு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு கொள்கை எதுவும் தேவையில்லை, நியாய தர்மங்களும் 2000 பேருக்கு மாத்திரம்தானே, வகுத்துக் கொள்ளலாம். அநீதி, அநியாயம், நயவஞ்சகம் என்ற சொற்களுக்கு இவர்களுடைய அகராதியில் இடமில்லை.

ஆனால் கோடானு கோடி மக்களோ கஞ்சிக்கு வழியில்லா விட்டாலும் தமது உயர்ந்த பண்புகளால் முன்னேறிய கலாச்சாரத்தை அதன் வழியே நாகரீகத்தைக் கைவரப் பெற்றவர்களாக உள்ளனர். வாங்கிய கடனை அடைக்க வேண்டி உயிரை அடமானம் வைத்தாவது திருப்பித் தருவது.. முடியாத போது மாய்த்துக் கொள்வது (இதுதானே விதர்பா விவசாயிகளின் தற்கொலை... தன்னை கூலியாளாய் மாற்றிய கின்லே தண்ணீர் கேனை ஏற்றிவரும் கோக கோலா லாரியைப் பார்த்த பிறகும் கோபம் வராமல் விதியை நொந்து கொள்ளும் முன்னாள் விவசாயிகள்...உலகமயமாக்கல் என்ற அரசியல் நடவடிக்கையின் பாதிப்பால் 8% தான் போனஸ் (போனஸ் என்பதுவே சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்பதுவும் நிறைய தொழிலாளிகளுக்கே தெரியாது) என ஜெயா அறிவித்தவுடன் போராடத்துவங்கிய போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மத்தியில் ஆட்டோ ஓட்டத் துவங்கிய CITU தோழர்களின் அரசியலற்ற தொழிற்சங்க வாதம் .. என இந்த அவலங்களை நோக்குகையில் கம்யூனிச இயக்கம் ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என முடிவு எடுப்பதுதானே சரி. உங்கள் வீட்டு வேலையாக இருந்தால் இப்படித்தானே யோசித்து இருப்பீர்கள்.

அந்த ஒரே கட்சி குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு தனது தவறுகளைக் களைந்து கொள்ளக் கூடியதாகத்தானே இருக்க வேண்டும். கூட்டத்தைப் பெரிதாக வைத்து கோழைகளாலும், ஏன் சண்டை போடுகிறோம் எனத் தெரியாதவர்களையும் (போலி கம்யூனிஸ்டுகள்) வைத்து போரில் ஜெயிக்க முடியாது. மன்னர்களுக்கும், ரவுடிகளுக்கும் வேண்டுமானால் அது சாத்தியம்.. கம்யூனிஸ்டுகளுக்கல்ல.

லேபிள்கள்: , , , ,