19/1/09

பாரதி vs. சி.பி.எம். vs. அதிமுக

சமீபத்தில் சென்னை புறநகர் பகுதியில் நடந்த ஒரு அதிமுக பொதுக்கூட்டத்தை தேநீர்க்கடையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்.

புரட்சித்தலைவியின் புகழ் பாடிய சிறப்பு பேச்சாளர் அதன்பிறகு கூட்டத்திற்கு விறுவிறுப்பு ஏற்ற கருணாநிதியைச் சாட ஆரம்பித்தார். கூட்டம் களை கட்டியது.

பாரதியின் பெயரால் அமைந்த விருதை மு.க விற்கு தந்தது தவறாம். அதற்கு அவர் சொன்ன விளக்கம் பாரதியின் அன்பர்கள் இதுவரை காணாத பொழிப்புரை.

கருணாநிதி பாரதியின் வார்த்தைகளை மீறியவராம். அதாவது ''மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம், ... சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்'' என்ற பாரதி நம்மை அரபிக்கடலில்தான் கப்பல் விடச் சொன்னார். ஆனால் கருணாநிதி வங்கக்கடலில் கப்பல் விடுகிறார். அதுவும் பாரதி 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' எனப் பாலம் போடச் சொன்னால் சேது கால்வாய் வெட்ட முனைகிறார் கலைஞர். எனவேதான் பாரதிக்கு எதிராகச் செயல்படும் கலைஞர் அவ்விருதுக்கு தகுதி படைத்தவர் அல்ல். என்றார் அந்த மாநிலப் பேச்சாளர்.

பாரதி அன்பர்களே உங்களுக்கு ஒரு சவால் ... இச்சவால் என்னிடமிருந்து வரவில்லை. உங்களது புதிய பங்காளி புரட்சித்தலைவியின் அணியிலிருந்து வருகிறது. ஒன்று பாரதியைக் காப்பாற்றுங்கள்.... முடியவில்லையா வேட்டியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

லேபிள்கள்: , , , , ,

9/1/09

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

<ப>
நண்பர் சந்திப்பு இதுபற்றிய தங்களது கட்சியின் கருத்து, போக்குகளை உதாரணத்துடன் தந்தால் எனக்கு புரிந்து கொள்ள உதவும். இனி தினசரி புரிதலுக்காக சில கேள்விகளுடன் சந்திப்பேன்.<ப>

லேபிள்கள்: , , , , ,

8/1/09

இயற்பெயரில் இயங்குங்கள் ! புரட்சித் தலைவியைத் தவிர யாருக்கும் புனைபெயர் வைக்க அதிகாரம் இல்லை. - CPM மாநிலக் குழுவின் தீர்மானம்

இயற்பெயரில் மட்டுமே இயங்க வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீர்மானித்து விட்டதால் மாற்றுக் கட்சியாக யாம் இருந்த போதும் எமது பெற்றோர் இட்ட பெயரையே பயன்படுத்துகிறேன். மாநிலக் குழு தீர்மானத்தை சந்திப்புவும் கடைபிடிப்பார் என நம்புகிறேன்.

2/1/09

ஏன் கம்யூனிஸ்டுகள் சித்தாந்தரீதியாகப் போராட வேண்டும்

ஏன் கம்யூனிஸ்டுகள் சித்தாந்தரீதியாகப் போராட வேண்டும் என்று அனைவருமே கேட்கிறார்கள்?

வெகு எளிய கேள்வி போலத் தோன்றக் கூடும். எளிய கேள்விகளுக்குதான் பதில் அளிப்பது சிரமமானது. குழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்வதைப் போலவே கடினமான ஒன்று.

கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி..போன்ற சில நூறு பேர்களுக்கானது தி.மு.க.

ஜெயலலிதா, சசிகலா, சேதுராமன் போன்ற சிலருக்கானது அதிமுக.

...இப்படி தமிழக அளவில் கட்சிகளை வகைப்படுத்தலாம். இக்கட்சியால் பயனடைபவர்கள் எண்ணிக்கை சில ஆயிரத்தைத் தாண்டாது.


இந்திய அளவில் சோனியா, ராகுல், சிந்தியா, சிதம்பரம் செட்டி, வாசன் மூப்பன், ..போன்ற பலரை represnt பண்ணும் கட்சி காங்கிரஸ்.

அத்வானி, வாஜ்பாய், இல கணேசன், சிந்தியா வகையறாக்களை represent பண்ணும் கட்சி
பாஜக....

இப்படி அகில இந்தியாவிலும் ஒரு லட்சம் பேரைக் கூட இவ்வளவு கட்சிகளும் represent பண்ணுவதில்லை. ஜாதிக்கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

நம் நாட்டின் மக்கள்தொகை நூறு கோடியைத் தாண்டி விட்டது. சமூகமோ வர்க்கங்களாகத்தான் பிரிந்து கிடக்கிறது. இன்னும் சொல்வதென்றால் இரண்டு வர்க்கசேர்க்கைகளாகப் பிரிந்து கிடக்கின்றது. ஆம் வாழ வழிசெய்து கொண்டவர்களின் இந்தியாவாகவும் வாழ வழி மறுக்கப்பட்டவர்களின் இந்தியாவாகவும் பிரிந்து கிடக்கின்றது நாடு.

இதை மக்கள் தமது சுயசிந்தனைகளாலே கண்டடைவார்கள் என விட்டுவிட முடியுமா? அல்லது அது சாத்தியமா? பெரும்பான்மை மக்களுக்கு சாதியின் பெயரால் கல்வியை மறுத்த ஒரு சமூகத்தில் இதை எதிர்பார்ப்பது கானல்நீரை நம்பி விவசாயம் செய்வது போல அல்லவா?

ஆகவேதான் வாழ வழியற்ற இந்திய விவசாயிகள், தொழிலாளிகள், சிறு உடமையாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், தேசிய முதலாளிகள் என இந்த globalization ஆல் பாதிக்கப்பட்ட அனைவரையும் represent பண்ணக் கூடிய ஒரே கட்சியை நிறுவ வேண்டிய தேவையும் அக்கட்சியின் கீழ் இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதும் அவசியம்தானே.

திமுக, அதிமுக, பாமக, மதிமுக ஆக இருந்தால் 1000 ம் 1000ம் சேர்ந்து கூட்டமாகக் கொள்ளையடிச்சு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு கொள்கை எதுவும் தேவையில்லை, நியாய தர்மங்களும் 2000 பேருக்கு மாத்திரம்தானே, வகுத்துக் கொள்ளலாம். அநீதி, அநியாயம், நயவஞ்சகம் என்ற சொற்களுக்கு இவர்களுடைய அகராதியில் இடமில்லை.

ஆனால் கோடானு கோடி மக்களோ கஞ்சிக்கு வழியில்லா விட்டாலும் தமது உயர்ந்த பண்புகளால் முன்னேறிய கலாச்சாரத்தை அதன் வழியே நாகரீகத்தைக் கைவரப் பெற்றவர்களாக உள்ளனர். வாங்கிய கடனை அடைக்க வேண்டி உயிரை அடமானம் வைத்தாவது திருப்பித் தருவது.. முடியாத போது மாய்த்துக் கொள்வது (இதுதானே விதர்பா விவசாயிகளின் தற்கொலை... தன்னை கூலியாளாய் மாற்றிய கின்லே தண்ணீர் கேனை ஏற்றிவரும் கோக கோலா லாரியைப் பார்த்த பிறகும் கோபம் வராமல் விதியை நொந்து கொள்ளும் முன்னாள் விவசாயிகள்...உலகமயமாக்கல் என்ற அரசியல் நடவடிக்கையின் பாதிப்பால் 8% தான் போனஸ் (போனஸ் என்பதுவே சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்பதுவும் நிறைய தொழிலாளிகளுக்கே தெரியாது) என ஜெயா அறிவித்தவுடன் போராடத்துவங்கிய போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மத்தியில் ஆட்டோ ஓட்டத் துவங்கிய CITU தோழர்களின் அரசியலற்ற தொழிற்சங்க வாதம் .. என இந்த அவலங்களை நோக்குகையில் கம்யூனிச இயக்கம் ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என முடிவு எடுப்பதுதானே சரி. உங்கள் வீட்டு வேலையாக இருந்தால் இப்படித்தானே யோசித்து இருப்பீர்கள்.

அந்த ஒரே கட்சி குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு தனது தவறுகளைக் களைந்து கொள்ளக் கூடியதாகத்தானே இருக்க வேண்டும். கூட்டத்தைப் பெரிதாக வைத்து கோழைகளாலும், ஏன் சண்டை போடுகிறோம் எனத் தெரியாதவர்களையும் (போலி கம்யூனிஸ்டுகள்) வைத்து போரில் ஜெயிக்க முடியாது. மன்னர்களுக்கும், ரவுடிகளுக்கும் வேண்டுமானால் அது சாத்தியம்.. கம்யூனிஸ்டுகளுக்கல்ல.

லேபிள்கள்: , , , ,